தஞ்சையில் உள்ள 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் குளத்திற்கு தண்ணிர் வரக்கூடிய சுரங்க நீர்வழி கால்வாய் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்,16.8.2020: தஞ்சையில் உள்ள 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருணாசாமி கோவில் குளத்திற்கு தண்ணிர் வரக்கூடிய சுரங்க நீர்வழி கால்வாயை கண்டுபிடித்த சிவனடியார்கள், அடைப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவில் கருணாசாமி கோவில் உள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாக விளங்கும் இக்கோவில் வஷிஸ்டேஸ்வரர் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம் கோவிலை ஒட்டி 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வடவாற்றில் இருந்து இக்குளத்திற்கு பூமிக்கடியில் சுரங்க கால்வாய் பாதை வழியாக தண்ணீர் வந்து குளம் நிரம்பி இருக்கிறது. தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழனுக்கு கருங்குட்டம் என்கிற தோல் நோய் வந்தபோது, இக்குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடியதால் கருங்குட்டம் நோய் விலகியதாக வரலாறு கூறுகிறது. இத்தகைய சிற்புமிக்க கருணாசாமி குளத்திற்கு தண்ணிர் வரும் தடத்தில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் வராமல் செடிகள் மண்டி புதராக காட்சி அளித்தது. சிவனடியார் செல்லப்பெருமாள் என்பவரும் மேலும் சிவனடியாhகள் சிலரும் இணைந்து தங்கள் சொந்த செலவில் குளத்தை தூர்வரி சுத்தம் செய்துள்ளனர். இதனை அடுத்து குளத்திற்கு தண்ணீர்; கொண்டு வர ஏற்பாடு செய்தபோது கரந்தை சன்னதி தெருவில் உள்ள காலி மனையின் பூமிக்கடியில் இருந்து கருணாசாமி குளத்திற்கு சுரங்க நீர் வழி கால்வாய் செல்வதை கண்டறிந்தனர். கால்வாயில் உள்ள மண் அடைப்பை அகற்றும் பணியில் தீவரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மாநகராடசி நிர்வாகம் தேவையான உதவிகள் செய்து தரவேண்டும என கோரிக்கை வைக்கின்றனர்.