11 அங்குல உயரத்தில் சந்தன மரத்தில் விநாயகர் சிலை செய்து சிற்ப கலைஞர் அசத்தல்

திருவள்ளூர், 23.08.2020: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருமழிசை பகுதியில்மர சிற்ப கலைஞர் 11 அங்குல உயரத்தில் சந்தன மரத்தில் விநாயகர் சிலை செய்து அசத்தியுள்ளார்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சந்தன மரத்தில் 11 அங்குல உயரத்தில் திருமழிசை சிற்பக் கலைஞர் டி.கே.பரணி என்பவரால் தயார் செய்யப்பட்டுள்ள கலைநயத்துடன் கூடிய நர்த்தன விநாயகர் சிலை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலகாலமாக கொண்டாப்படுவது வழக்கமாகும். அதேபோல், நிகழாண்டில் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபட்டது .திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசையை சேர்ந்த சிற்பக்கலைஞர் டி.கே.பரணி. இவர் மரத்தில் பல்வேறு வகையான நுண்ணிய சிற்பங்களை தயார் செய்வதில் மிகவும் கை தேர்ந்தவர். இவர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சந்தன மரத்தில் விநாயகர் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய விநாயகர் சிற்பத்தை தயார் செய்துள்ளனர். அந்த வகையில் 11 அங்குல உயரம், 7 அங்குல அகலம், 3 அங்குல தடிமனில் விநாயகர் சிலை வெகு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்த சிலை தாமரை மலரை யானை தாங்கி நிற்பது போலவும், அதன்மேல் நின்று விநாயகர் நடனமாடுவது போன்று சந்தன மரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிலையைச் சுற்றி விநாயகரின் வாகனமான எலிகள் இசைக் கருவிகளை வாசிப்பது போன்று சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் நுண்ணிய வேலைபாடுகளுடன் அற்புதமான வகையில் சிலை எழிலுற தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை 3 மாதங்களில் தயார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.திருமழிசை பகுதியைச் சேர்ந்த டி.கே.பரணிக்கு இதுபோன்ற நுண்ணிய சிற்பத்தை உருவாக்கியதற்காக ஏற்கெனவே குடியரசு தலைவரின் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கவர். அதுமட்டுமின்றி மாநில அரசின் விருதுகள், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டின் விருதுகள், கிராப்ட்ஸ் எம்போரியத்தின் விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட சிலைகளையும் செய்து அசத்தியுள்ளார்