முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நில அபகரிப்பு செய்துவிட்டதாக கூறி விவசாயி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

இராமநாதபுரம்,14.92020: இராமநாதபுரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நில அபகரிப்பு செய்துவிட்டதாக கூறி விவசாயி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம் அடுத்துள்ள சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காரிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் கான். இவருடைய நிலத்தை சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நூறுமுகமது என்பவர் அவரின் பெயருக்கு நிலத்தை மாற்றியும், பட்டா மாறுதல் செய்து முறைகேடு செய்து விட்டதாக கூறி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இவருக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்காததால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பாஸ்கான் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைக்க முயற்சித்தார், அப்போது கேணிக்கரை தனிப் பிரிவு தலைமை காவலர் குமாரசாமி தடுத்து நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்றினார். இதனால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இது தொடர்பாக காவல்துறை உடனடியாக வந்து தீக்குளிக்க முயற்சித்த அப்பாஸ்கானை மீட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்களிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நிலம் அபகரிப்பு தொடர்பாக விளக்கி புகார் மனு அளித்தார். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி கார்த்திக் உறுதி அளித்தார். ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக அப்பாஸ் கான் கதறி அழுதது அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.