இராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

இராமநாதபுரம்,14.9.2020: இராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அவர்கள் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இ அவர்கள், பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து வார விழா -போஷன் மா விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டார். மேலும், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் ஊரகப் பகுதிகளில் களப்பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக ஆக்ஸிஜன் அளவீட்டுக்கருவி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடத்தில் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.
இந்த நிகழ்வின்போது, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் செந்தில்குமார்(இராமநாதபுரம்), இந்திரா(பரமக்குடி), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.