சுசீந்திரம் அருகே வறுமை காரணமாக குளத்தில் விழுந்து  தாய் - மகள் தற்கொலை

கன்னியாகுமரி,15.9.2020: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வறுமை காரணமாக குளத்தில் விழுந்து  தாய் - மகள் தற்கொலை - வறுமை காரணமாக கைகளை கட்டிக்கொண்டு தாயும் இரு மகள்களும் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைய நயினார் குளத்தில்  3 பெண்கள்  நீரில் மூழ்கி கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மூன்று பேரையும் நீரில் இருந்து மீட்ட நிலையில் ஒருவர் உயிருடனும்  2 பேர் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர். உயிருடன் இருந்த பெண் கன்னியாகுமரி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்டவரிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், உயிருடன் மீட்கப்பட்டவர் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்த வடிவேல் முருகன் என்பவரது மகள் சச்சு (40) எனவும், உயிரிழந்தவர்கள் தாயார்  பங்கஜம் (70), மற்றும் சகோதரி மாலா (48) எனவும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மூன்று பேரும் தனது தந்தையார் வடிவேல் முருகன் தயவில் வாழ்ந்து வந்ததாகவும் அவர் நேற்று இறந்து விட்டதாகவும் இதனால் தனிமையில் வாழ்ந்து உணவிற்கு  வழியின்றி வறுமையில் வாழ்வதைவிட தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து குளத்தில் கைகளை ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.