பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,16.9.2020: மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை எடுத்துவிட்டு மக்களுக்கு எதிராக, மத்திய அரசு போடும் சட்டங்களை எதிர்த்து, கேட்போர் மீது பொய் வழக்குப் போடும், தங்கள் கருத்து உரிமைகளை கூறுவோர் மீதும் ,குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடும் சிறுபான்மை மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கருத்துக்களை எழுதுவதற்கும் கருத்துக் கூறவும் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு, நாட்டு மக்களின் பேச்சி உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த வர்களை விடுதலை செய்யக்கோரியும், பிஜேபி அரசுக்கு எதிராக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.