தஞ்சையில் 175 நாட்கள் பூட்டப்பட்ட பூச்சந்தை மீண்டும் திறப்பு - வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்,16.9.2020: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 175 நாட்கள் பூட்டப்பட்ட பூச்சந்தை மீண்டும் திறப்பு - வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து, வணிக வளாகங்கள், காய்கரி சந்தைகள், பூச் சந்தைகள் கடந்த 6 மாதகாலமாக பூட்டப்பட்டு கிடந்தது. இந்நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து பல கட்டுப்பாட்டுகளுடன் சந்தைகளை திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் தஞ்சை விளார் சாலையில் பூக்காரத் தெருவில் இயங்கி வந்த பூச்சந்தை கடந்த 175 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. அதிகாலை முதல் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சந்தைக்கு வந்து தங்கள் பூக்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்தனர். பூச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து பூக்களை வாங்கிச் சென்றனர். 6 மாதகாலமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த வியாபாரிகள் தற்போது பூச்சந்தை திறக்கப்பட்டதால் மீண்டும் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.