தமிழ்மாநில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில்  டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு

திருவள்ளூர்,16.9.2020: டாஸ்மாக் பார் மாதாந்திர உரிமத்திற்கான கட்டணத்தை பாதியாக குறைத்திட வேண்டும் என்றும்,  கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் ஊழயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்மாநில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில்  டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் மனு வழங்கினர். 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு தற்போது தளர்வுகளுடன் பெரும்பாலான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது.  அதன்படி அரசு டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்துவிட்ட நிலையில் டாஸ்மாக் பார் வருகிற 18-ந் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.  திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் 210 பார்களும்,  மேற்கு மாவட்டத்தில் 129 பார்களும் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்மாநில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் பார் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மேலாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 6 மாதமாக டாஸ்மாக் பார் மூடப்பட்டதால் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வுருவதாகவும், கட்டிட உரிமையாளருக்கும் வாடகை தொகையை 6 மாதமாக வழங்காமல் பாக்கி வைத்திருப்பதாகவும், வருகிற 18-ந் தேதி டாஸ்மாக் பார் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சமூக விலகலை கடைபிடிப்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதால் டாஸ்மாக் கூடத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்றும், ஏற்கனவே இருந்த வருமானம் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் தமிழக அரசு டாஸ்மாக் பார் மாதாந்திர உரிமத்திற்கான தொகையாை பாதியாக குறைத்திட வேண்டும் என்றும்,  டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மது விற்பதால் மது அருந்துபவர்கள் பார் உள்ளே வராமல் சென்றுவிடுவதால் விற்பனையாளர்கள் மீது மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.