வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்,16.9.2020: வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம். ஊழியர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த அனல்மின் நிலைய வாயிலில் ஊழியர்களுக்கு எதிரான மின்வாரிய செயல்பாடுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய மின்ஊழயிர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்காவிட்டாலும், அவர்கள் பெற்று வந்த சலுகைகள் பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஊழியர்களின் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களை மின்வாரியம் ரத்து செய்ததற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது என்றும், ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்க நில்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.