பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மின் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்,16.9.2020: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மின் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து தொழிற்சங்கத்தை மதிக்காமலும், முத்தரப்பு ஒப்பந்தத்தை மதிக்காமல் வாரிய தலைவரின் அராஜக போக்கை கண்டித்தும், கொரானாவில் இறந்த மின்வாரிய தொழிலாளிக்கும் இதர துறைகளுக்கு வழங்கியது போல் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், வேலைப்பளு ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகள் ரத்து செய்ததை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அந்தந்த மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.