பழனி முருகன் கோயில் உண்டியல் வருவாய் 3 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 ரூபாய்

திண்டுக்கல்,16.9.2020: பழனி முருகன் கோயில் உண்டியல் வருவாய் 3 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 ரூபாய் கிடைத்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 1ஆம் தேதியிலிருந்து தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து கோயிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது . 14 தினங்களாக பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலை மீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணப்பட்டது. 3 நாட்களாக எண்ணிய உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 3 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 ரூபாய். தங்கம் 1039 கிராம், வெள்ளி 13923 கிராம், 1236 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.