கன்னியாகுமரியில் ஆலய தெப்பக்குளத்தை சுத்தம் செய்த இளைஞர்கள் பாராட்டிய ஊர் மக்கள்

கன்னியாகுமரி,20.09.2020: கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்தனி ஆலய தெப்பக்குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத் தாமரை மற்றும் பாசிகளை அகற்றிய இளைஞர்கள். பாரட்டிய ஊர் மக்கள்.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்தனி ஆலய தெப்பக்குளமும் மழையால் முழுமையாக நிரம்பியது. இருந்தும் தெப்பக்குளம் முழுவதும் ஆகாய தாமரை மற்றும் பாசிகள் படர்ந்திருப்பதால் பொதுமக்கள் பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் "இயற்கையுடன் ஒரு அமைப்பை" சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து கோவில் தெப்பக்குளத்தில் இருந்த ஆகாய தாமரை மற்றும் பாசிகளை அகற்றினர். இளைஞர்களின் இந்த செயலை அப்பகுதி பொதுமக்களும் , பக்தர்களும் பெரிதும் பாராட்டினர்