மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூர், 20.9.2020: திருவள்ளூர் அருகே மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து. ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமாயின

திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகர் அருகே விச்சூரில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த ராபர்ட் என்பவருக்கு சொந்தமான மாத்திரைகள் கான மூலப்பொருள் தயாரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது.இங்கு தயாரிக்கப்படும் மூலப்பொருள் ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறது.
தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது இந்நிலையில் காலை இந்த தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மணலி புது நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சற்று நேரத்தில் தீப்பிடித்து வள வள வளவென்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது இதனால் தகவல் அறிந்து மாதவரம் திருவொற்றியூர் மணலி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று தெரிகிறது. மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது . மணலி புதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்