செங்குன்றத்தில் மர குடோனில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் 20.9.2020: திருவள்ளூர் அருகே செங்குன்றத்தில் மர குடோனில் திடீர் தீ விபத்து. தீயணைப்பு வீரர்கள் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் தனியாருக்கு சொந்தமான மர கிடங்கு இயங்கி வருகிறது. இந்த குடோனில் திடீரென தீப்பற்றி மரங்களில் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமா அல்லது தீ விபத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்