விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் எந்த ஒரு திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தாது - மின்துறை அமைச்சர் பி. தங்கமணி

நாமக்கல்,20.9.2020: தமிழகத்தில் விவசாயிகளுக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநில அரசு, வேளாண் திட்டங்களை செயல்படுத்தும்., மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார்., தமிழகத்தில் தக்கல் முறையில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் ஆறு மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மாநில மின்சாரம் மற்றும் மதுவிலக்கு- ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி குமாரபாளையத்தில் பேட்டி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் (20.9.20) நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநில மின்சாரம் மற்றும் மதுவிலக்கு- ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் P. தங்கமணி, அரசின் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.தொடக்கமாக, பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலாம்பாளைம், கொக்கராயன்பேன்டை வண்ணாம்பாறை, களியனூர் அமானி கரட்டாங்காடு, களியனூர் அக்ரஹாரம், மோடமங்கலம் ஆகிய இடங்களில் புதிய கழிப்பிடங்கள் அமைத்தல், மோடமங்கலத்தில் பெண்கள் கழிப்பிடம் பராமரிப்பு செய்து பயன்பாட்டுக் ஒப்படைத்தல், சவுதாபுரம் பாலாஜி நகர் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பைப் லைன் அமைத்தல், பள்ளிபாளையம் நகராட்சிக்கு அருகே அம்மா சூப்பர் மார்க்கெட் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து அலமேடு பகுதியில் இறகுபந்து கூடம் மற்றும் குமாரபாளையத்தில் அம்மா சூப்பர் ஜிம் ஆகியவற்றையும் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகளை நடைபெறுகின்றன.இந்நிகழ்ச்சிகளின் நிறைவாக குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் பி. தங்கமணி, தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கடந்த சட்டமன்ற தொடரில் இந்த ஆண்டு தட்கலில் 25 ஆயிரமும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் 25 ஆயிரம் என மொத்தம் ஐம்பதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்றார்போல் முதலமைச்சரின் அறிவுரையோடு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்பு பெற வரும் அக்டோபர் 31 வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவுடன் சீனியாரிட்டி அடிப்படையில் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக வழங்கப்பட்டுவிடும்.தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி தமிழகத்தில் உள்ளதால் மின்வெட்டு வராது என ஏற்கனவே தெரிவித்துள்ளோம். விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு எவ்வளவு மின்சாரம் தேவை பட்டாலும் அதற்கேற்றார்போல் தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சாரத்தை வழங்க தயாராக உள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.மின்சார திருத்தச்சட்டம் 2020 நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் மின்சார பயன்பாட்டுக்கு மீட்டர் வைக்கமாட்டோம் எனவும் தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார். எந்த ஒரு சூழ்நிலையிலும் விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் எந்த ஒரு திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தாது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை தமிழக முதல்வர் ஆதரித்து, அதன் சாதக அம்சங்களை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறுவதற்காக இந்தத் திட்டம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால் எந்த ஒரு விவசாயியும் எந்த சூழலிலும் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்க மாட்டார் என்றும் மாநில மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் P. தங்கமணி குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ப.. மணிராஜ், குமாரபாளையம் வட்டாட்சியர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ். செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்