கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக நட்சத்திர ஏரியை சுற்றி பூத்து குலுங்கும் செர்ரி வகை பூக்கள்

திண்டுக்கல்,23.9.2020: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக நட்சத்திர ஏரியை சுற்றி பூத்து குலுங்கும் செர்ரி வகை பூக்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரல் மழை மற்றும் கன மழை பொழிந்து வந்த நிலையில் தற்பொழுது இதமான சீதோஷ்ன சூழ்நிலை நிலவி வருவதால் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இ -பாஸ் பெற்று வர தொடங்கியுள்ளனர், வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக நட்சத்திர ஏரியினை சுற்றிலும், சுற்றுலா பயணிகள் வர கூடிய சுற்றுலா இடங்களில் செர்ரி வகை பூக்கள் பூத்து குலுக்கின்றன. இந்த செர்ரி பூக்கள் ஜப்பானின் தேசிய மலராகும் (காட்டு செர்ரி, வன செர்ரி) பாரஸ்ட் செர்ரி என வகை படுத்தப்படுகிறது . கொடைக்கானல் சீதோஷ்ன நிலையை பொறுத்து மரங்களில் இலைகள் விழுவதும், துளிர்ப்பதும், பூக்கள் பூப்பதும் நிகழ்கின்றன. மேலும் இந்த செர்ரி பூக்களில் உள்ள தேனை குருவி இனங்கள் தேனை அருந்தி செல்கின்றன.