மகளிர் குழுக்களுக்கு மத்திய கூட்டுறவு 1.50 கோடி ரூபாய் கடன் உதவி

திருநெல்வேலி, 3.6.2020 : நெல்லை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் குழுக்களுக்கு நெல்லை மத்திய கூட்டுறவு சார்பில் 1.50 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.

இதனை பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார் . முன்னதாக குடிமராமத்து பணிகளையும் தொடங்கி வைத்தார் .
கொரோனா ஊரடங்கால் மகளிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கு வங்கி கடன் உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்களின் நிலையை உயர்த்தும் நோக்கில் நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 1.50 கோடி ரூபாய் கடன் வழங்கும் விழா நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியத்தலைவர் ஷில்பாபிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கலந்து கொண்டு 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை 379 பயனாளிகளுக்கு வழங்கினார் .
முன்னதாக நெல்லை வட்டத்திற்கு உட்பட்ட சத்திரம்புதுக்குளத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் உபரிநீர் நீர் கால்வாய்களை மறுசீரமைப்பு செய்யும் குடிமராமத்துப் பணிகளையும் தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கணேசராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.