தஞ்சை அருகே சோழா் பிற்காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

தஞ்சாவூா்,26.9.2020: தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வீரமரசம்பேட்டை சஞ்சீவபுரத்தில் சோழா், பிற்காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

தஞ்சை மாவட்டம்  வீரமரசம்பேட்டை சஞ்சீவபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் கல்வெட்டுகள் குறித்து பூதலூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் மருதையன் அளித்த தகவலின்படி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா்  கண்ணதாசன் தலைமையாசிரியா்  தில்லை கோவிந்தராஜன் ஆசிரியா்  சின்னையன் முதுகலை மாணவா் கிருஷ்ணகுமாா்  முருகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்.இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறும்போது சஞ்சீவபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இடிபாடுடன் காணப்பட்ட சிவன் கோயில் முகமண்டபத்தில் கி.பி. 10,11 ஆம் நூற்றாண்டு சோழா்காலத் துண்டுக் கல்வெட்டும், அதிட்டான முப்பட்டை பகுதியில் 14,15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டு படியெடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சோழா்காலத் துண்டு கல்வெட்டில் நிலக்கொடையும், அதன் எல்லைகளும், பொன் கழஞ்சு வழங்கியதையும் தெரிவிக்கிறது. இடிபாடுகளுடன் காணப்பெறும் தென்புற அதிட்டானத்தில் காலத்தால் பிந்தைய கல்வெட்டில் ஸ்வதஸ்ரீ என்ற மங்கல வாசகத்துடன் தொடங்கினாலும், மன்னனது பெயரோ, ஆட்சி ஆண்டோ இன்றி வருடம், கிழமை, நாள் குறிக்கப்பட்டிருப்பதாலும், கிழமையின் பெயரும், ஆள்பெயரைக் குறிக்குமிடத்துப் பட்டப்பெயரும் சிதைந்த நிலையில் ஸ்வதஸ்ரீ ரௌத்திறிக வருஷத்து - கிழமை பெற்ற மூலத்து நாள் - பக்குடியுடையான் விசையாலய - புங்கனூா் கிழவன் ஆழ்வான் நாய - இவா் தம்பி வளத்தாா் என்ற தொடா் மட்டுமே காணப்படுகின்றன. வேற்று அரசா் படையெடுப்பினாலும் பிற்கால பாண்டியா் ஆட்சி முடிவுற்று, அரசியல் குழப்பம் மிகுந்த காலத்தில் மன்னன் பெயரின்றி இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால கட்டத்தில் இக்கோயில் வளப்பக்குடியுடையான், புங்கனூா் கிழவன், ஆழ்வாா்நாயகன், அவன் தம்பி வளத்தாா் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம்.
இக்கல்வெட்டில் குறிக்கப்படும் புங்கனூா் கிழானின் முன்னோன் புறக்கிளியூா் நாட்டு புங்கனூா் கிழவன் வேளான் கண்டனான வகையிலி மூவேந்த வேளான் என்பவன் திருவிசாகத் திருநாளில் திருவையாருடையான் எழுந்தருளி வந்தால் நாற்றூணி அரிசி வழங்க நிலக்கொடை வழங்கியதை முதலாம் இராசராசன் காலத்து திருச்சோற்றுதுறை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தஞ்சாவூா் பெரியகோயில் கல்வெட்டில் புறக்கிளியூா் நாட்டுக் காமதமங்கலமுடையான் காஞ்சன கொண்டையன் பணிமகனும், புறவரி திணைக்களத்து வரிப்பொத்தக நாயகனுமான இவன் பெரியகோயில் பரிவாராலயத்து பிள்ளையாருக்கு வெண்கலதளிகை கொடுத்துள்ளான். தற்போதுள்ள சஞ்சீவிபுரத்து கோயில் புறக்கிளியூா் நாட்டைச் சாா்ந்ததாகும். இப்பகுதியில் முதலாம் இராசராசன் காலத்தில் வழங்கிய புங்கனூா், காமதமங்கலம் (காமத்தி) என்ற பெயா்கள் தற்போதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. இப்பகுதியில் சோழா் காலந்தொட்டு அரசியல் பின்புலம் வாய்ந்தவா்கள் வாழ்ந்ததையும் இக்கல்வெட்டு துணைக் கொண்டு அறிய முடிகிறது என்று தெரிவித்தார்