பழனியில் தேவஸ்வான பெயரில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க அதிக ‌ பணம் பறிக்கும் சம்பவம் அதிகரிப்பு

திண்டுக்கல்,28.9.2020: பழனியில் தேவஸ்வான முடிக்கொட்டகை எனக்கூறி அழைத்துச்சென்று ஏமாற்றி பக்தர்களுக்கு மொட்டை அடித்து‌ பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் முடி‌ ஆயிரக்கணக்கான ரூபாய் விலை போகும் என்பதால் பெண் பக்தர்களை குறிவைத்து ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 5மாதங்களுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படட்து. இதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தருகின்றனர். பழனி வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த ஏதுவாக கோவில் நிர்வாகம் சார்பில் சரவணப்பொய்கை மற்றும்‌ கிரிவீதியில் ஒருங்கிணைந்த முடிக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதால் மற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முடிக்காணிக்கை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணப்பொய்கை அருகே செயல்பட்டுவரும் தனியார் குளிக்குமிடத்தை தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்று கூறி வரிசையில் நிற்கும் பக்தர்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மொட்டை அடித்து பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. ஈரோட்டில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் தெரிவித்ததாவது :- ஈரோட்டில் இருந்து குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்ய வந்ததாகவும், சரவணப்பொய்கையில் மொட்டை அடிக்கவந்த போது நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த போது அருகிலேயே தேவஸ்தானத்திற்கு சொந்தமான‌ முடிக்கொட்டகை உள்ளது என்று கூறி அழைத்துச்சென்றனர். அங்கு மொட்டை அடித்தபிறகு ஒரு நபருக்கு முன்னூறு ரூபாய் கட்டணம் என்று கூறி வசூல் செய்ததாகவும், குழந்தைகளுக்கு சுடுதண்ணீர் கேட்டால் ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலித்ததாகவும் தெரிவித்தார். பழனி சரவணப்பொய்கை முடிக்கொட்டகையில் இருபது ஊழியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மொட்டை அடிக்கும் நிலை உள்ளது. இதனால் கடும் வெயிலில் குழந்தைகள்‌, பெண்கள் மற்றும் முதியவர்கள் நிற்கும்நிலை உள்ளது. இவர்களுக்கு குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது‌. குறிப்பாக பெண்களின் முடி அதிகமான விலை போவதால் பெண் பக்தர்களை குறிவைத்து ஏமாற்றுவதும் அதிகரித்துள்ளது. எனவே முடிக்கொட்டகையில் கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைவாக மொட்டை அடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கட்டணக்கழிவறை உரிமையாளர்கள் மற்றும் போலி கைடுகள் மீது கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.