உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி,17.10.2020: உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . முதல் முறையாக பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெறுகிறது.

உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்திலுள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு தசரா திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறக்கூடிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிசா சூரசம்ஹாரம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. தசரா திருவிழாவில் மாலை அணிந்து விரதம் இருக்கக்கூடிய பக்தர்கள் அம்மன் , காளி , குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம்பெற்று அதை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகம் தசரா திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தசரா திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் உள்ளூர்களிலேயே வேடமணிந்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். திருவிழா நிகழ்ச்சிகளை யூ டியூப் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்று ஆன்லைன் மூலம் 8000 உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு அம்மன் துர்க்கை, விஸ்வகர்மா, பாலசுப்பிரமணியர் நவநீதகிருஷ்ணன் மஹிசாசூரமர்த்தினி உள்ளிட்ட பல்வேறு கோலத்தில் கோவில் பிரகார மண்டபத்தில் எழுந்தருவார். விழாவின் சிகர நிகழ்ச்சியான கடற்கரையில் நடக்ககூடிய மஹிஷாசூரசம்ஹாரம் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 26 ஆம் தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த தசரா திருவிழா வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.. தூத்துக்குடி, திருநெல்வேலி கன்யாகுமரி சாலை மார்க்கங்களை தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.