தஞ்சை அருகே வாளமார்கோட் ஏரிக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

தஞ்சாவூர்,17.10.2020: தஞ்சை அருகே வாளமார்கோட் ஏரிக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

அகில இந்திய மக்கள் சேவை விவசாய பிரிவு மாநில தலைவரும், பனை விதைப்புக்குழு தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக பனை விதைப்பு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி முதற்கட்டமாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஏரிக்கரையோரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை கயிலாபுரி ஏரிக்கரையில் பனை மற்றும் உயிர் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர் பனை விதை ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்து. இதில் அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 500-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். மேலும் அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு மரப்போத்துக்கள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.