கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா பிரமாண்ட கொலு அமைப்பு

கன்னியாகுமரி,17.10.2020: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி பக்தர்கள் சங்கம் சார்பில் கோவில் கொலு மண்டபத்தில் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நவராத்திரி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி இன்று காலையில் பகுதி அம்மன் கோவில் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொலுமண்டபத்தில் பக்தர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கொலுவிற்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் திருவிழா அன்று முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நிகழ்ச்சி மகாதானபுரத்தில் நடப்பது வழக்கம். இதற்காக கோவிலில் இருந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி யானை, குதிரைகள் முன்செல்ல 500 -க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்று மகாதானபுரத்தில் பானாசுரன் என்ற அரக்கனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பரிவேட்டை நிகழ்ச்சி 10-ம் திருவிழாவான 26- ந்தேதி மாலை 6 மணிக்கு பகவதியம்மன் கோவில் முதல் முறையாக மகாதானபுரத்துக்கு பதிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஈசான மூலையில் நடக்கிறது.இந்த பரிவேட்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லிக்கான தமிழக சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வந்திருந்தார். அப்போது பக்தர்கள் சங்கம் சார்பில் 26ம் தேதி நடைபெறும் விழாவிற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர் கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் தற்போது அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறிவிட்டு சென்றார்.தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், இரவில் வாகனப் பவனி ஆகியன நடக்கிறது.