நத்தம் செந்துறை அருகே 6 கிலோ வெடிமருந்து பறிமுதல்

திண்டுக்கல்,17.10.2020: நத்தம் செந்துறை அருகே 6 கிலோ வெடிமருந்து பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-சிலுவன் குறையூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45).இவர்  உரிய அனுமதியின்றி தனது தோட்டத்து பகுதியில் வெடி தயாரித்துள்ளார். திருவிழா காலங்களில் அதிகளவில் வெடி தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக புகார் வந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி உள்ளிட்ட  போலீசார் அவரின் தோட்டத்தை சோதனை செய்தனர். இதில் 6 கிலோ கரிமருந்து, திரி, 600 வெடிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.