விவசாயிகளின் புகார் மீது சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர்,18.10.2020: விவசாயிகள் இடம் இருந்து எந்த ஒரு புகார் வந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ்

தஞ்சை அடுத்த குருவாடிப்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு. ஆய்வுக்கு பின் பேட்டியளித்த அவர் எல்லா ஆண்டுகளை விட இந்த விளைச்சல் கூடுதலாக இருக்கிறது. விவசாயிகள் விளைவிக்கிற நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த கொள்முதல் பருவத்தில் (காரீப்) 32.41 லட்சம் மெ. டன்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது முதல் இதுவரை உள்ள வரலாற்றில் சாதனை. இதில், கொரோனா பொது முடக்கக் காலத்தில் 12.76 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.தற்போது, தமிழகம் முழுவதும் 826 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறுவை பருவத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2.10 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து எந்த விதமான புகாரும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். எங்காவது ஓரிடத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு ரூபாய் பணம் பெற்றுக் கொண்டால் கூட, அது அவமானத்துக்குரிய செயல். இதை பணியாளர்களிடம் ஒவ்வொரு கொள்முதல் பருவம் தொடங்கும்போதும் கூறிவிடுவோம். எனவே, இந்த அவமானகரமான செயலை எந்த ஊழியரும், அலுவலரும் செய்யக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். துறையின் சார்பில் ஒவ்வொரு பருவம் தொடங்குபோது கூறிவிடுவோம். இந்நிலையில், புகார் வந்தாலோ, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஒரே நாளில் அதிக அளவில் அறுவடை செய்யப்படுவதால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாகிவிடுகிறது. இதையும் 2 நாள்களில் கொள்முதல் செய்துவிடுகிறோம். மேலும், தாமதமில்லாமல் கொள்முதல் செய்யப்படுவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். நெல் வரத்து அதிகமாக இருக்கும்போது, தேவைப்பட்டால் அதே ஊரில் மற்றொரு நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் 1.86 லட்சம் மெட்ரிக் டன்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்லை உடனடியாக அரைவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு 12 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த கொள்முதல் அளவு தற்போது 23 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. என்றாலும், கிடங்கு பிரச்னை கிடையாது. இதுவரை இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது