ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவளத்தில் ஆஸ்டின் எம்எல்ஏ தலைமையில் கண்டன பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி,18.10.2020: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவளத்தில் ஆஸ்டின் எம்எல்ஏ தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு தந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஜார்காண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் ஸ்டேன் சாமி. அவர் பலமுறை ஏழை எளிய மக்களுக்காக அரசிடம் தொடர் கோரிக்கைகளை முன் வைத்து, மனித மாண்புகள் புறகணிக்கப்படும் போது அதற்கு நியாயம் கேட்டும் வந்துள்ளார். அவரை ஜார்கண்ட் போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனால் அவரை கைது செய்ய காரணமான மத்திய அரசை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்டின் எம்எல்ஏ , பங்கு தந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஸ்டெயின் சாமியை கைது செய்த ஜார்கண்ட் காவல்துறை, ஜார்க்கண்ட் அரசு மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்.