தமிழக மக்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக இலவசமாக கொரோனா தடுப்பூசி - முதல்வர்

புதுக்கோட்டை,22.10.2020: கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடித்தவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக இலவசமாக தடுப்பூசி போடப்படும் புதுக்கோட்டையில் 20 21 ஆம் ஆண்டு புதிய பல் மருத்துவமனை தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார் முதலில் கொரோனா
தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் பின்னர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சிறு குறு தொழில் அதிபர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு குரானா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக இருப்பதால் பாதிப்பின் அளவு குறைந்துள்ளது.உலக முதலீட்டாளர் மாநாடு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 ஆம் ஆண்டு நடத்தியபோது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது தான் விராலிமலை ஐடிசி நிறுவனம் அந்த நிறுவனத்தில் தற்போது நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டால் எந்த பயனும் இல்லை என்று கூறி வருகிறார் ஆனால் விராலிமலை ஐபிசி நிறுவனமே அதிமுக அரசின் சாதனைகள் சான்று. இந்த ஆண்டு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் 96 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அவர் அவை ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டுள்ளது.கடந்த முறை நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 213 சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 303 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கு தயாராகி வருகின்றனர்.இதுவரை 194 நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன.காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் ஜனவரி மாதத்தில் கரூர் மற்றும் புதுக்கோட்டையில் எனது தலைமையில் அடிக்கல் நாட்டப் படும்.தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தால் காவிரி நீர் பாயும் பகுதிகளில் நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா காவிரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை பகுதி வரை சென்று விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து சாகுபடி நன்றாக விளைந்துள்ளது.இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் 23 லட்சம் நெல்தான் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது ஆனால் இந்த ஆண்டு நன்றாக விளைச்சல் இருந்தால் இதுவரை 38 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கல்லணை கால்வாய் சீரமைப்பு அதற்கு 2000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கும்.புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2020 21 ஆம் ஆண்டு 50 மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு புதிய பல் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு புதிய ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது.கொரோனா நோய் தாக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் தற்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது தடுப்பு மருந்து கண்டு பிடித்தவுடன் தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாக அரசு சார்பிலேயே போடப்படும்
இவ்வாறு அவர் பேசினார்