நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மெகா புள்ளி வண்ண கோலப்போட்டி

கன்னியாகுமரி,23.10.2020: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சோட்டபணிக்கன் தேரிவிளையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மெகா புள்ளி வண்ண கோலப்போட்டி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சோட்டபணிக்கன்தேரிவிளை இந்து நாடார் சமுதாய வகைக்குட்பட்ட அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 17-ம்தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று மாலை பெண்களுக்கான மெகா புள்ளி வண்ண கோலப்போட்டி நடைபெற்றது. புள்ளி வண்ணக்கோலப்போட்டியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச்சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு கோலமிட்டனர். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சாலையின் நடுவில் நின்று கோலமிட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற கரும்பாட்டூரைச்சேர்ந்த நிஷாவிற்கு ரொக்கப் பணமாக ரூபாய் பத்தாயிரமும், இரண்டாம் பரிசு பெற்ற லீபுரத்தைச்சேர்ந்த பகீரதிக்கு ரூபாய் 5000ம், மூன்றாம் பரிசு பெற்ற சோட்டப்பணிக்கன் தேரிவிளையைச்சேர்ந்த மணிசெல்விக்கு ரூபாய் மூவாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சோட்ட பணிக்கன் தேரிவிளையைச் சேர்ந்த மேற்கு வங்காளம் பழங்குடியினர் வளர்ச்சித்துறை இணைச்செயலாளர் அர்ஜுன் ஐஏஎஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக கோலப்போட்டியை சோட்டப்பணிக்கன்தேரிவிளை ஊர்த்தலைவர் சிவபெருமான் துவக்கி வைத்தார். கோலப்போட்டிக்கு நடுவராக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெர்பச்சுவல் ரொசிட்டா செயல்பட்டார். நவராத்திரி விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பெண்களுக்கு இந்த போட்டி வைக்கப்பட்டது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கோல போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்து சென்றனர்.