மதுரையில் மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை

மதுரை,24.10.2020: மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு தெப்பகுளம் உள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் 219 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன்,ராஜன் செல்லப்பா, அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வில் மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார்.