முருகன்குன்றம் திருக்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை

கன்னியாகுமரி,24.10.2020: முருகன்குன்றம் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை. கன்னியாகுமரி போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் மலையின் உச்சியில் அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலின் பூசாரி நேற்று இரவு கோயில் பணிவிடைகளை முடித்துவிட்டு சுமார் 8.30 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இன்று காலையில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் கோயிலின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்று சுவாமி சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் வெள்ளிச்சிலை, வெள்ளிப்பொருட்கள், அருவாள் மற்றும் பழக்குலை ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு சென்றதும் மர்ம நபர்கள் கோவிலில் அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் மேலும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மர்ம நபர்கள் தங்களது நடமாட்டம் குறித்த தடையங்களை அழிப்பதற்காக அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.