பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பா பேட்டி

தூத்துக்குடி, 15.06.2020 : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம் போன்ற வளர்ச்சி பணிகள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது

தான் அதற்கும் திமுகவும், கனிமொழியும் ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பேட்டி.
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பாரதிய ஜனதா அரசால் செய்யப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில் அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஊழலற்ற வகையில் ஆட்சி செய்து வருகிறது. இந்திய அரசியல் 370 ஆவது சட்டப்பிரிவு இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியது துணிச்சலான பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது என அவர் கூறினார். அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் இந்த அரசு 80 கோடி மக்களுக்கு 25 கிலோ அரிசி மற்றும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமை போன்றவைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. பெண்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அந்த அரசு ஜன்தன் திட்டத்தின் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 20 கோடி பெண்களுக்கு 30 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. சுய உதவி குழு பெண்களுக்கு பினை இல்லா கடனை 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது இதனால் பெண்கள் பயனடைவார்கள். விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது
விவசாய கடன் அட்டை மூலமாக விவசாயிகளுக்கு இரண்டரை லட்ச ரூபாய் முதல் இரண்டரை கோடி ரூபாய் வரை கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் வசதியும் அரசு செய்துள்ளது என்ற அவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் மற்றும் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம் போன்ற வளர்ச்சி பணிகள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது தான் அதற்கு திமுகவும், கனிமொழியும் ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என்றார்.