கூடுதலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள மேலுமொரு கருவி நிறுவத்திட்டம்

தூத்துக்குடி, 15.06.2020 : தூத்துக்குடியில் கூடுதலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள மேலுமொரு பரிசோதனை கருவி நிறுவத்திட்டம் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா நோய் பரவல் கட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 16,536 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 398 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 95 பேர் இன்னமும் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். சராசரியாக நாளொனறுக்கு 20 நபர்கள் குணம் பெற்று வருகின்றனர். சென்னை மற்றும் அதன்‌ சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வந்தவர்களில் கிட்டத்தட்ட 160 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி சமூக பரவல் இல்லை.
மேலும் முறையான அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழைபவர்களை பிடிக்க சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலியான இ-பாஸ் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் வருவோரை கண்டுபிடிக்க சோதனை சாவடியில் இ-பாஸ் "க்யூஆர் கோடு" ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்கள் விதிமுறை மீறல் செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.மே மாதத்தில் மட்டும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்3568 நபர் இங்கு திரும்பி வந்துள்ளனர். இதில் 158 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல, சென்னை காஞ்சிபுரம் த,ருவள்ளூரிலிருந்து 8396 நபர்கள் வந்துள்ளனர். மொத்தத்தில் மே மாதம் மட்டும் 22 ஆயிரம் பேர் தூத்துக்குடி திரும்பி வந்துள்ளனர். தினமும் 250 முதல் 300 பேர் வரை கரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.மாவட்டத்தில் காயல்பட்டினம், தென்திருபேரை ஆகிய 2 இடங்கள் மட்டும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளது எனவும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.15 லட்சம் மதிப்பில் மேலுமொரு பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.தனிமை முகாம்களில் கூடுதலாக 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.