கோயில் நிலங்களை மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல், 16.06.2020 : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சியம்மன்,பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது

.தற்போது இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாகக் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏராளமான கோயில் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளாகவும் மாற்றப்பட்டு விட்டன.இவற்றை மீட்பதற்காக, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அறநிலையத் துறையினர், நிலங்களை மீட்டெடுப்பதில் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாகச் செயல்பட்டதால், வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. கோயில் நிலத்திற்கான சர்வே எண்களுக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக பத்திரபதிவு மேற்கொள்ளவும், கட்டட வரைபட அனுமதி வழங்கவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தனிநபர்கள் சிலர் முயற்சித்து அத்தடையை நீக்கம் செய்ய வைத்தனர். இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆயினும் இதனை அறநிலையத்துறை அலுவலர்கள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தற்போது, கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.   கோயில்கள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இக்கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கைப் பணத்தை எடுத்துச் செல்ல  கோயில் செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில், அறநிலையத்துறை அலுவலர்கள் நான்கு பேர் வந்தனர். முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றைப் புறக்கணித்து ஒரே காரில் நால்வரும் வந்தனர். அம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவித்துவரும் நிலையில், ஊரடங்கு காலத்திலும், உண்டியல் பணத்தை எடுத்துச்செல்ல வந்த அவர்களின் கடமை உணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.