4 - வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

திண்டுக்கல், 16.06.2020 : திண்டுக்கல் குமுளி நெடுஞ்சாலையில் 4 - வழிச்சாலையில் நில கையகப்பத்தியதற்க்கு வழங்க வேண்டிய இழப்பீடு 42% வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், தொகையை வழங்காமல் சாலை அமைக்கும் பணியை துவங்கியதால் கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வக்கப்பட்டியில் 4 - வழிச்சாலை விரிவாக்க பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.திண்டுக்கல்- குமுளி மாநில நெடுஞ்சாலையை இருவழிச் சாலையை விரிவாக்கம் செய்து 4 வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2015-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் வக்கப்பட்டி கிராமத்திற்குள் சாலை செல்வதற்கான நில எடுப்பு பணிகள் துவங்கப்பட்டு போதிய இழப்பீடு வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் 30% தொகை முதல் தவணையாகவும் 12% இரண்டாவது தவணையாகவும் வழங்க உத்தரவிட்ட நிலையில் பெரும்பாளானோர் நிலுவைத் தொகை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு நிலுவைத் தொகை வழங்கப் படாமலேயே சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியர் மீனாதேவி, ஆத்தூர் வட்டாட்சியர் பவித்ரா மற்றும் காவல்துறை, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட வந்தவர்களுடன் பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.இதில் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நிவாரணம் பெற வேண்டிய மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என முடிவு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டும்வரை சாலைபோடும் பணியை செய்யக்கூடாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொண்டதன் பேரில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.