மூணாறில், லாக்காடு கேப் சாலையில் மண்சரிவு

மூணாற், 18.06.2020 :  மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு கேப் சாலையில் பயங்கர சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு மூலம் பாறைகள் உருண்டு சாலைகளை மூடியது.

மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு கேப் சாலை அமைந்துள்ளது . இங்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன . கேப் சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய தொழில்நுட்ப அதிகாரிகள் கூறிய நிலையில் ஜூன் 7ம் தேதி முதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் இந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு கிழவிப்பறை பகுதியில் குடியிருக்கும் பழனிவேல் என்பவரின் வீட்டின் அருகில் வரை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இருட்டு மற்றும் மழை காரணமாக இவரின் குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.மேலும் கேப் சாலையில் 5 நிமிடம் தொடர்ச்சியாக பயங்கர சத்தங்கள் பர கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.தற்பொழுது போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இன்று மண்சரிவு குறித்து கூடுதல் விபரங்கள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.