சீன பொருட்களை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும்

ராமநாதபுரம், 22.06.2020 : சீன பொருட்களை வாங்க மாட்டோம் என பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் ராணுவ வீரர் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்பு சிறப்பு தீர்மானம்...

இந்திய - சீன எல்லையில் நடந்த சண்டையில் ராமநாதபுரம் அருகே கடுக்கலூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி 15 ந்தேதி வீர மரணம் அடைந்தார் அவரின் உடல் ராமநாதபுரம் அருகே கடுக்கலூர் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது அதைத்தொடர்ந்து இன்று பழனி திருவுருவ படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ராணுவ நலச்சங்கம் சார்பில் ராமநாதபுரம் பகுதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர் அதன்பின்பு எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர் அதன்பின் நடைபெற்ற சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் சீனப் பொருட்களை முற்றிலும் வாங்க மாட்டோம் இந்திய பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்துவோம், மற்ற மாநிலங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவியது போல் தமிழக அரசும் பழனியின் குடும்பத்திற்கு மேலும் உதவ வேண்டும் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.