பிறந்தநாள் விழா கொண்டாடிய திமுக பிரமுகருக்கு நோய் தொற்று

திருவள்ளூர் , 23.06.2020 : திருவள்ளூர் அருகே பண்ணை வீட்டில் ஆடம்பரமாக தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய திமுக பிரமுகர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்குcorona நோய்தொற்று உறுதி..

செய்யப்பட்டதால் திமுக பிரமுகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு வீதியில் தலைமறைவான அக்கட்சி நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் வலைவீச்சு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் மாலதி, இவரது கணவர் குணசேகரன் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் இந்தநிலையில் குணசேகரன் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கண்ணம்பாளையம் கிராமத்திலுள்ள தனது மாந்தோப்பு பண்ணை வீட்டில் தனது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினார் கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் குணசேகரனுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு அங்கு நடைபெற்ற பிரியாணி விருந்திலும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாடிய திமுக பிரமுகர் குணசேகரனுக்கு சளிக்காய்ச்சல் இருந்ததால் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்corona நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது தற்போது இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பீதியில் உள்ளனர் இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பிறந்தநாள் விழா கொண்டாடிய திமுக பிரமுகர குணசேகரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் மீது ஆரம்பாக்கம் காவல்துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் திமுக நிர்வாகிகள் பலர் தலைமறைவாக உள்ளனர் இதனிடையே பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் தானாக முன்வந்து தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்கும் படியும் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளும்படியும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்