சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர், 24.06.2020 : திருவள்ளூர் அருகே சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு...

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூரில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் வெங்கல் வழியாக செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. இவ்வழியே சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் முறையாக தார்பாய் போட்டு மூடப்படாமல் செல்வதால் தங்களது கிராமத்தில் மண் தூசு படர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும், மேலும் அசுர வேகத்தில் லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகள் தங்களது கிராமம் வழியே செல்ல கூடாது என அவர்கள்கோரிக்கை வைத்தனர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அளித்த உறுதியை ஏற்று லாரிகள் விடுவிக்கப்பட்டன இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.