சிலம்பத்தை திறந்த வெளியில் பயிற்சி தர அரசு அனுமதிக்க வேண்டுகோள்

திருவள்ளூர்,17.7.2020: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிலம்பாட்டதை திருவள்ளூரில் திறந்த வெளி திடலில் பயிற்சி அளிக்க அரசு அனுமதிக்க வேண்டும்!!
தேசிய பயிற்சியாளர். சிலம்ப .முருககனி வேண்டுகோள்.விடுத்துள்ளார் .

தமிழக பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம். 1980ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்க்கப்பட்டது. 1995ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த தெற்காசிய போட்டியில் காட்சிமுறை விளையாட்டாக ஆடி காட்டி பாராட்டு பெற்று 2007 ல் பள்ளி விளையாட்டாக சேர்க்கப்பட்டது. 2019ல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேருவிளையாட்டு அரங்கில் தேசிய அளவில் எஸ். ஜி.எஃப். ஐ. போட்டியில் வெற்றி பெற்ற சிலம்ப வீரர்கள்14பேருக்கு தலா 2லட்சம் ரூபாய் கொடுத்து பாராட்டினார்.உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சிலம்ப பயிற்சி தரமுடியவில்லை எனவும் உடல் ஆரோக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட சிலம்பத்தை திறந்த வெளி திடலில் பயிற்சி தருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் சிலம்ப விளையாட்டு தமிழக பாரம்பரிய மருத்துவ ஆற்றல் கொண்டது. 5அடி கம்புடன் 6அடி இடைவெளி விட்டு முககவசம் அணிந்து கொண்டு காலை அல்லது மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்வதாக தேசிய சிலம்ப பயிற்சி யாளர். சிலம்ப ஆர். முருககனி கோரிக்கை வைத்துள்ளார்.