ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது எம்எல்ஏ கருணாஸ் புகார்

இராமநாதபுரம்,1.8.2020: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாதிரீதியாக செயல்படுவதாக திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்கப் போவதாக அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையானது குற்றங்களைத் தடுப்பதிலும், நடந்த குற்றங்களை கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வதிலும் அக்கறைசெலுத்துவதில்லை. மேலும், காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்குகளையும் பதிவு செய்வது தொடர்கிறது.தொண்டி பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் போது கூட, கைப்பற்றியவற்றை வெளிப்படையாக காவல்துறை தெரிவிப்பதில்லை. ராமநாதபுரத்தில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். அத்துடன், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி துறை ரீதியாகவும், புகார் அளிப்பவர்களிடமும் பாரபட்சத்துடன் நடப்பதாகவும், சாதி ரீதியாக செயல்படுவதகாவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இதுகுறித்து ஆதாரப்பூர்வமாக ஏற்கெனவே காவல்துறை துணைத் தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளேன். ஏற்கெனவே அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தற்போது ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்த பின்னர், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.