குடிமகன்கள் கூட்டத்தால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்

திருவள்ளூர், 01.08.2020: குடிமகன்கள் கூட்டத்தால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல். ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னையை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள்டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியின்றி குவிந்துள்ளதால் கொரோனா பரவும் அபாயம்.ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளைய முழு ஊரடங்கின் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதால் குடிமகன்கள் இன்றே மதுபானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பட்டமந்திரி, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். சமூக இடைவெளியின்றி முண்டியடித்தபடி நின்று குடிமகன்கள் மதுபானங்களை ஆட்டோ, இருசக்கர வானங்களில் வந்து காத்திருந்து மது வாங்கி செல்கின்றனர். சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் எல்லையை ஒட்டியுள்ள அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சென்னை வாசிகள் மதுபாட்டில்களை வாங்க முண்டியடித்தப்படி இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. டாஸ்மாக் கடை மூடப்பட்டாலும் குடிமகன்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் கடை மீண்டும் திறந்தவுடன் மதுவாங்க காத்திருக்கின்றனர்.பாதுகாப்பு பணியில் போதிய போலிசார் இல்லாததால் சென்னை வாசிகளின் படையேடுப்பு அதிகரித்து காணப்பட்டது