"கல்பனா சாவ்லா " விருது பெரும் பெரம்பலூரின் வீர பெண்மணிகள்

பெரம்பலூர்,13.8.2020: பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் நீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு "கல்பனா சாவ்லா " விருது. வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர் .

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் நீர்த்தேக்கத்தை பார்வையிட சென்றனர்.
இந்திலையில் நீர் நிலையில் உள்ள வடிகால் பகுதியில் இறங்கிய 4 இளைஞர்களில் பயிற்சி மருத்துவரான ரஞ்சித், பவித்ரன் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
நீரில் தத்தளித்து கொண்டு இருந்த 2 இளைஞர்களை அங்கு இருந்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்த வள்ளி ஆகிய மூன்று பெண்கள் தாங்கள் உடுத்தி இருந்த சேலையை வீசி காப்பாற்றினர்.இதனிடையே இளைஞர்களை காப்பாற்றிய வீரப் பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா வீர தீர விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.இந்திலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.தொடர்ந்து அவர்களை மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.