தூத்துக்குடி,18.9.2020: சட்டப்பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு : மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

கன்னியாகுமரி,18.9.2020: கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை அருகே பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலி கெரோனா காலத்தில் காதல் மனைவியையும் மூன்று வயது மகனையும் காப்பாற்ற பெயின்டர் வேலைக்கு சென்றவர் உடலை கைப்பற்றி தக்கலை போலீசார் விசாரணை.

திண்டுக்கல்,18.9.2020: கொடைக்கானலில் ஏலக்காய் விளைச்சல் ஆரம்பம், ஏலக்காய் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தர மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை.

இராமநாதபுரம்,17.9.2020: இராமநாதபுரம் அருகே இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகையை பறித்துக்கொண்டு கத்தியால் கழுத்தில் குத்தி கொலை. எஸ்.பி. நேரில் சென்று விசாரணை.

கன்னியாகுமரி,17.9.2020: நீட் தேர்வு தொடர்பாக தனது நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களை மட்டும் மனதிற்கொண்டு பேசும் நடிகர் சூர்யா தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் நிலைமையையும் மனதில் கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவை,17.9.2020: கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி கன்றுகுட்டி உயிாிழப்பு

திருவள்ளூர்,17.9.2020: திருவள்ளூர் அருகே புழல் ஏரியில் வணிகவரித்துறை ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு. கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை.

கேரளா,17.9.2020: இடுக்கி மாவட்டம் மூணார் பெட்டிமுடியில் கடந்த மாதம் நடந்த நிலச்சரிவில் சிக்கி 76 பேர் மரணம் அடைந்தனர் இன்று வரை 4 பேர் உடல் கண்டுபிடிக்கவில்லை.

Show more post