கோவை,20.9.2020: வால்பாறை சுற்றுலா பயணிகள் வருகை அதிகாிப்பு முகக்கவசம் அணியாமல் சுற்றுலா வருபவா்களுக்கு நகராட்சி அதிகாாிகள் அபராதம் விதித்தனா்.

நாமக்கல்,20.9.2020: தமிழகத்தில் விவசாயிகளுக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநில அரசு, வேளாண் திட்டங்களை செயல்படுத்தும்., மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார்., தமிழகத்தில் தக்கல் முறையில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் ஆறு மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மாநில மின்சாரம் மற்றும் மதுவிலக்கு- ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி குமாரபாளையத்தில் பேட்டி.

திருவள்ளூர், 20.9.2020: திருவள்ளூர் அருகே மாதவரம் காவல் மாவட்ட சரகத்தின் சார்பில் இளம் சிறார்களுக்கு சீர்திருத்த அறிவுரை வழங்கப்பட்டது.

திருவள்ளூர் 20.9.2020: திருவள்ளூர் அருகே செங்குன்றத்தில் மர குடோனில் திடீர் தீ விபத்து. தீயணைப்பு வீரர்கள் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர், 20.9.2020: திருவள்ளூர் அருகே மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து. ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமாயின

கன்னியாகுமரி,20.09.2020: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு கடை வியாபாரிகள், நடமாடும் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட 100 வியாபாரிகளின் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியன கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது

தஞ்சாவூர்,20.9.2020: கிசான் திட்டத்தில் முறைகேடு ஈடுபட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் தஞ்சையில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் பேட்டி.

தஞ்சாவூர்,20.09.2020: மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சட்ட நகல் எரிப்பு போராட்டம்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Show more post