திருவள்ளூர்,16.9.2020: திருவள்ளூர் அருகே பொன்னேரியில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,16.9.2020: திருவள்ளூர் அருகே செங்குன்றத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. ஆன்லைன் ரம்மி சீட்டு சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனால் தற்கொலை என போலீஸ் விசாரணையில் தகவல்.

கோவை,16.9.2020: கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பொருட்சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலை தொடர்கதையாக உள்ளது

திண்டுக்கல்,16.9.2020: நத்தம் அருகே திருமலைக்கேணி கோவிலில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை.

திண்டுக்கல்,16.9.2020: பழனியருகே பேரிடர்கால மீட்பு நடவடிக்கை குறித்து தீயணைப்புத்துறையினர் சார்பில் பொமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,15.9.2020: நீட் தேர்வுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் நூதன போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் போலிசார் இடையே தள்ளுமுள்ளு.

பெரம்பலூர்,15.9.2020: பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

கோவை,15.9.2020: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அதிகமான பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் சாலைகளில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Show more post