கன்னியாகுமரி,15.9.2020: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வறுமை காரணமாக குளத்தில் விழுந்து  தாய் - மகள் தற்கொலை - வறுமை காரணமாக கைகளை கட்டிக்கொண்டு தாயும் இரு மகள்களும் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்.

இராமநாதபுரம்,14.9.2020: இராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அவர்கள் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம்,14.92020: இராமநாதபுரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நில அபகரிப்பு செய்துவிட்டதாக கூறி விவசாயி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கன்னியாகுமரி,14.9.2020: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் முனைவர். நாகேந்திரனும் இணைந்து.நாகர்கோவில் நீதிமன்றம் வளாகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் (14 _16.09.20) வரை.மூன்று நாட்கள் நடைபெறும் கபசுர குடிநீர் முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர். வழக்கறிஞர் மரியஸ்டிபன் தலைமையில்.

திண்டுக்கல்,14.9.2020: பழனியில் சொத்துத் தகராறு காரணமாக அண்ணன் வெட்டியதில் காவலர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .

திண்டுக்கல்,14.9.2020: திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் அதிரடி சோதனை நடைபெற்றது.

திண்டுக்கல்,14.9.2020: பழனி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி‌வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை ஆஜராகும் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல்,14.9.2020: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வின் போது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியம் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

Show more post