பெரம்பலூர்,20.9.2020: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநில நிர்வாக குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி,20.09.2020: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நகை பட்டறை பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை. கொள்ளையர்கள் குறித்து கொற்றிகோடு போலீசார் விசாரணை.

Feature

கன்னியாகுமரி,20.09.2020: கன்னியாகுமரி மாவட்டம் வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்தனி ஆலய தெப்பக்குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத் தாமரை மற்றும் பாசிகளை அகற்றிய இளைஞர்கள். பாரட்டிய ஊர் மக்கள்.

தஞ்சாவூர்,20.9.2020: சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலை இடிக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு.

கேரளா,19.9.2020: இடுக்கி மாவட்டம் மூணார் இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை. மூணார், தேவிகுளம் போன்ற மலைப்பகுதிகளிலும் நிலச்சரிவு காணப்படுகிறது. மாவட்டத்தில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,19.9.2020: திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நேரத்திலும் காணொளி காட்சி மூலமாக மக்களை சந்திக்கிறார் ஆனால் இந்தியாவிலேயே கொரோனா காலத்திலும் நேரடியாக களபணியாற்றுகின்ற ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

பெரம்பலூர்,19.9.2020: பெரம்பலூர் அருகே இரண்டு வீடுகளில் 3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போலீசார் விசாரணை.

தஞ்சாவூர்,19.9.2020: பட்டுக்கோட்டை அருகே அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட மோதலில் அண்ணன் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த தம்பி கைது .

Show more post