Sunday, June 22, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedஇரு நாட்களாக குறைந்த தங்க விலை இன்று உயர்ந்தது; சவரனுக்கு ரூ.400 சேர்க்கப்பட்டது.

இரு நாட்களாக குறைந்த தங்க விலை இன்று உயர்ந்தது; சவரனுக்கு ரூ.400 சேர்க்கப்பட்டது.

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 18) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. கடந்த ஜூன் 16ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305க்கு விற்பனை ஆனது.

நேற்று (ஜூன் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,600க்கும், கிராமுக்கு ரூ.105 சரிந்து, ஒரு கிராம் ரூ.9,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று (ஜுன் 18) தங்கம் விலைஅதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்தது.

இந்த சூழலில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments