திருவள்ளூர்,12.7.2020:திருவள்ளூர் அருகே வடகரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேலி சித்திரம் வரைந்த தனியார் வார இதழை கண்டித்து மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் வார இதழை கிழித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,12.7.2020:தஞ்சையில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி இருந்தன

Feature

கன்னியாகுமரி,12.7.2020 : கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றதால் பரபரப்பு

பெரம்பலூர், 12.07.2020 :பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக மாநில அரசு அறிவித்திருந்த முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தனர்

தூத்துக்குடி,12.7.2020:தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இனக்கமாக இல்லாத காவல் அதிகாரிகள், காவலர்கள் 72 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து பொதுமக்களிடம் எப்படி பழக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

திண்டுக்கல்,12.7.2020: கொடைக்கானல் மலை பகுதியில் பலா பழம் சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் படையெடுப்பு ,காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show more post