இடுக்கி,16.7.2020:இடுக்கியில் இன்று அதிகமான கொரோனா பதிவாகும். தொடர்பு கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு என இடுக்கியில் இருந்து புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை 56 க்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன

கன்னியாகுமரி,16.7.2020: கந்தசஷ்டி கவசத்தையும், முருகப் பெருமானையும் இழிவாக விமர்சனம் செய்து யூடியூப் சேனலில் பேசியதைக்கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் பாஜகவினர் கொட்டாரம் ஜங்ஷனில் கண்டனபோராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர்,16.7.2020: செங்குன்றம் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல். பெண்உட்பட மூவர் கைது.செய்யப்பட்டனர்

கன்னியாகுமரி,16.7.2020:இந்துக்களின் முக்கிய நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த அமாவாசையன்று இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு, குளம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

பெரம்பலூர்,16.07.2020 :பெரம்பலூரில் டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேன்ஸ் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒட்டுநர்களுக்கு ரூ 15,000 நிவாரணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்,16.07.2020:இசுலாமியர்களின் இறைத்தூதர் நபிகள் குறித்து கேலி சித்திரம் வரைந்து சமூக ஊடகங்களில் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலகத்தில் புகார்:

திருவள்ளூர், 15.7.2020: வில்லிவாக்கத்தில் நள்ளிரவில் கஞ்சா, மது போதையில் ரவுடிகள் அட்டூழியம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை . விடுத்தனர்.

Show more post