தஞ்சாவூர்,19.9.2020: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜீஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரி கட்சிகள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தஞ்சாவூர்,19.9.2020: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி தஞ்சையில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் முககவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் நின்று தீபாராதனை பார்க்காமல் அர்ச்சனை செய்யாமல் பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.

பெரம்பலூர்,19.9.2020: எளம்பலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தனியார் பள்ளி இணைந்து பொதுமக்களுக்கு கொரோனோ பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல்,20.9.2020: திண்டுக்கல் அருகே கடையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை போதையில் வந்த வாலிபர் வெட்டிப் படுகொலை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு.

இராமநாதபுரம்,19.9.2020: இராமநாதபுரம் அருகே குந்துகால் பகுதியில் 70 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்குதளத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மீனவர்கள் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி,19.9.2020: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை தாலி கட்டிய கணவனே நாற்காலியில் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி சித்திரவதை செய்து, அரிவாளால் வெட்டி, கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருவள்ளூர்,18.9.2020: திருவள்ளூர் அருகே மாதவரத்தில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு நடைபெற்ற அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி,18.9.2020: இந்தியா முழுமையும் விவசாயிகளின் கந்துவட்டி கொடுமையை தடுக்க இந்திய பிரதமரின் திட்டமான கிஷான் திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை போன்று குமரியில் 500 அதிகமான பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு துணைபோன தமிழக அரசின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Show more post